பதிவு செய்த நாள்
16
செப்
2017
12:09
வெங்கத்துார் கண்டிகை : வெங்கத்துார் கண்டிகை, துலுக்காணத்தம்மன் கோவிலில், வரும் 19ம் தேதி, நவராத்திரி விழா துவங்குகிறது. திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட வெங்கத்துார் கண்டிகை. இங்குள்ள, துலுக்காணத்தம்மன் கோவிலில், 15ம் ஆண்டு, நவராத்திரி விழா, 19ம் தேதி, மாலை, 6:00 மணிக்கு கலச பூஜையுடன் துவங்குகிறது.அதன் பின், 20ம் தேதி முதல், 27ம் தேதி வரை, தினமும், மாலை, 6:00 மணிக்கு, சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும். 28ம் தேதி, அம்மன், மகாலட்சுமி அலங்காரத்திலும், 29ம் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.தொடர்ந்து, 30ம் தேதி, காலை, 5:30 மணிக்கு, முளைப்பாரி எடுத்து, கங்கையில் விடுதுல் நிகழ்ச்சி யும், காலை, 7:30 மணிக்கு, திருமஞ்சன பூஜையும், மாலை, 6:00 மணிக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், இரவு, 8:00 மணிக்கு அம்மன் சைனாதி நிகழ்ச்சியும் நடைபெறும்.நிறைவு நாளான, அக்., 1ம் தேதி, காய், கனி நிறை பணி காட்சியுடன் மீனாட்சி பொன்னுாஞ்சல் சேவையும் நடைபெறும். நவராத்திரி விழாவைமுன்னிட்டு, வரும் 22ம் தேதி, மாலை, 6;00 மணிக்கு, சுமங்கலி திருவிளக்கு பூஜை நடைபெறும்.