Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் காவிரி மகா புஷ்கர விழா: ... குபேர சாய் ஜெகன் மாதா மந்திரில் சிறப்பு ஹோமம் குபேர சாய் ஜெகன் மாதா மந்திரில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை காவிரி மகா புஷ்கரம் விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2017
04:09

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் மகா புஷ்கரம் விழா கடந்த 12ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. மகா புஷ்கரம் விழாவின் 5ம் நாளில் தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே துலாக்கட்ட காவிரி க்கரையில் முன் னோர்களுக்கு திதி கொடுத்து, புஷ்கரத்தில் புனித நீராடினர். தொடர்ந்து அவர்கள் வடகரையில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதர், கேதாரநாதர், கல்யாண சுந்தரர் மற்றும் தென்கரையில் உள்ள காவிரித் தாயையும் வழிபட்டனர்.

Default Image

Next News

தீர்த்தவாரி: புஷ்கரம் விழாவை முன்னிட்டு வடகரையில் எழுந்தருளியுள்ள அன்னபூரனேஸ்வரி சமேத அன்னபூரனேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருஷ்டி, வியாதி போக்கும் ஸ்ரீ மகா சுதர்சன ஹோமம் நடைபெற்றது. சிதம்பரம் தியாகப்பா தலைமையில் தீக்ஷிதர்கள் வேத மந்தரங்கள் ஓத பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடை பெற்றது. தொடர்ந்து அ ன்னபூரணி அம்பாள் காவிரி கரையில் எழுந்தருள, யாகத்தில் வைத்து ஆவாகனம் செய்த புனிதநீரை கொண்டு அபிஷேகம் செய்து, தீர்த்தவாரி நடைபெற்றது.

கன்னிகா பூஜை:
காவிரி மகா புஷ்கரம் விழாவின் ஒரு பகுதியாக துலாக்கட்டத்தின் வடகரையில் கன்னிகா பூஜை நடைபெற்றது. இதனையொட்டி 27 பெண் குழந்தைகளை அமரவைத்து, அவர்களுக் கு மாலை அணிவித்து, புத்தாடைகள், மங்களப் பொருட்கள் வழங்கி, வேத மந்திரங்கள் ஓத தீக்ஷிதர்கள் ஆரத்தி எடுத்து வழிபாடுகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கல ந்துகொண்டு தரிசனம் செய்தனர்.   

போலீஸ் அலட்சியம், போக்குவரத்து ஸ்தம்பிப்பு:
மகா புஷ்கரம் விழாவிற்காக தற்காலிக நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டிருந்த போதிலும் 5ம் நாள் திருவிழாவான நேற்று பக்தர்கள் வருகை அதிகரித்த நிலையில் போலீசாரின் அல ட்சியத்தால் பேருந்து, டூரிஸ்ட்வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நகரினுள் அனுமதிக்கப்பட்டதை அடுத்து கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து 3 மணிநேரம் ஸ் தம்பித்தது. பின்னர் கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. இதனையடுத்து விழா முடியும் வரை உயர் போலீஸ் அதிகாரி தலைமையில் கூடுதல் போலீசாரை பணியமர்த்தி பாதுகாப்பை பலப்படுத்துவதுடன், போக்குவரத்தை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

விடுமுறை அறிவிப்பு: இந்நிலையில் வரும் 20 ம் தேதி காவிரி மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் திருப்பதி ஜீயர் மற்றும் செங்கோல் ஆதின குருமகா சன்னிதானம் த லைமையில் விழா நடைபெற உள்ளது. இதனையொட்டி தமிழக அரசு வரும் 20ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை கிரௌஞ்சமலை கனக்சௌரி கார்த்திக் சுவாமி கோயிலில் ... மேலும்
 
temple news
கொடைக்கானல், கொடைக்கானலில் வைகாசி விழாவையடுத்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. கொடைக்கானல் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வாசவி கனியாக பரமேஸ்வரி ஜெயந்தியை ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழா முன்னிட்டு தங்க ரிஷப ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; வைகாசி உற்சவ விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தீர்த்த குளத்தை சுற்றி வலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar