வேலாயுதம்பாளையம்: வேலாயுதம்பாளையம் மலைவீதி சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்து. விழாவையொட்டி கடந்த, 14ல், பக்தர்கள் காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வந்தனர். விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின் விநாயகர் வழிபாடு, தீப ஆராதனை, புண்யாகம், வாஸ்துசாந்தி, காப்புக்கட்டுதல், கும்ப அலங்காரம், யாகசாலைபிரவேசம், முதற்கால யாக வேள்வி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து, கடந்த, 15 அதிகாலை இரண்டாம் கால யாக பூஜை நடத்தி, கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜைகள் நடக்கின்றன.