பதிவு செய்த நாள்
18
செப்
2017
01:09
தங்கவயல்: தங்கவயல் சிவராஜ்நகரில் அன்னை வேளாங்கண்ணி தேர் பவனியில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். சிவராஜ் நகரில் அன்னை வேளாங்கண்ணி தேவாலய, 20ம் ஆண்டு விழா, நிர்வாகி தாடி அன்பழகன் தலைமையில், பஞ்சாயத்து தலைவர் ஞானசம்பத், எச்.ஏ.எல்., அசோக், முன்னிலையில், 15ம் தேதி கொடியேற்றப்பட்டது. சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது. நேற்று முன்தினம், காலை, 6:00 மணி முதல் சிறப்பு பிரார்தனை, மேரி குழுவினரின் ஜெபமாலை, மதியம் அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. மாலையில், அன்னை தெரசா சிலைக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டது. நேற்று காலை, முதல் பிரார்த்தனை நடைபெற்றது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அலங்கரிக்கப்பட்ட மாதா தேர் பவனி, பேண்டு வாத்தியம் முழங்க வாண வேடிக்கைகளுடன் எஸ்.டி.பிளாக், இ.டி.பிளாக், பூசாமிநகர், எஸ்.பி.காலனி, சல்டானா சர்க்கிள், வழியாக சென்று மீண்டும் தேவாலயம் வந்தடைந்தது.