பதிவு செய்த நாள்
23
செப்
2017
12:09
பொள்ளாச்சி;பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடக்கிறது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகளும், தினமும் இரவு, 7:00 மணிக்கு, சொற்பொழிவு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு மங்கள இசை, நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இன்று இரவு, 7:00 மணிக்கு, புலவர் பிரபாகரமூர்த்தி, ’அறங்கள் - 32’ என்ற தலைப்பிலும், ’தவமும், தவப்பயனும்’ என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றுகிறார். வரும், 24 மற்றும், 25ம் தேதிகளில், ’நாம் யார்’, ’பிரசாதம்’ என்ற தலைப்பில், ராமமூர்த்தி பேசுகிறார்.வரும், 26 மற்றும் 27ம் தேதிகளில், மயிலாடுதுறை மேனாள் தருமபுரம் கலை கல்லுாரி முதல்வர் சிவசந்திரன், ’கலை மகள் வழிபாடு’, ’மலைமகள் வழிபாடு’ ஆகிய தலைப்புகளில் பேசுகிறார். தொடர்ந்து, 28 மற்றும் 29ம் தேதி பேராசிரியர் புனிதா, ’குருவே துணை’, ’திருவே துணை’ ஆகிய தலைப்புகளில், பேசுகிறார். வரும், 30ம் தேதி மாலை, 5:30 மணிக்கு நாதஸ்வர இன்னிசை நிழ்ச்சி நடக்கிறது.
பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழாவையொட்டி, தினமும் மாலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. விழாவையொட்டி, கோவிலில், நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. தொடர்ந்து, கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. மகாலிங்கபுரம் சச்சிதானந்த சத்குரு சாய்நாதர் ஆலயத்தில், தினமும் மாலை, 5:00 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதுபோன்று, பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில், ஐயப்பன்கோவில் மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள கோவில்களில், நவராத்திரி விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடக்கிறது.