நத்தம், நத்தம் பகுதியில் உள்ள கோயில்களில் நவராத்திரி மற்றும் லட்சார்ச்சனை விழா நடந்தது. ந.கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலில் நடந்த லட்சார்ச்சனை விழா கண்பதி ஹோமத்துடன் துவங்கியது. செண்பகவள்ளி தாயார் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. பின், அலங்காரம், பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நத்தம் மாரியம்மன் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் துவங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. திரளான பெண்கள் பங்கேற்றனர்.