பழநி கோயில் வின்ச்-ல் பக்தர்கள் இரண்டு மணிநேரம் காத்திருப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2017 01:09
பழநி; ஞாயிறு விடுமுறை தினத்தில், பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள் ’ரோப்கார்’ நிறுத்தம் காரணமாக, வின்ச் ஸ்டேஷனில் மட்டும் இரண்டு மணிநேரம் வரை காத்திருந்தனர். தமிழக கோயில்களில் பழநி மலைக்கோயில் தான் ரோப்கார், வின்ச் கள் இயக்கப்படுகிறது. சிறுவர்கள் முதல் பெரியோர்கள் ரோப்கார் மற்றும் வின்ச் களில் விரும்பிபயணம் செய்கின்றனர். தற்போது ரோப்கார் ஆண்டுபராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று ஞாயிறுவிடுமுறை தினத்தில் குவிந்த பக்தர்கள் வின்ச் களில் பயணம் செய்ய 2 மணிநேரம்க காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர். அங்கு பக்தர்கள் பொதுதரிசன வழியில் காலபூஜையின்போது ஒரு மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து மூலவரை தரிசனம்செய்தனர். கிரிவீதியில் தடைசெய்யப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.