நெல்லிக்குப்பம்: வேண்டவராசி அம்மன் கோவில் நவராத்திரி விழாவில், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. திருப்போரூர் அடுத்த நெல்லிக்குப்பம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற வேண்டவராசியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, ஆண்டுதோறும் நவராத்திரி விழா கோலாகலமாக நடைபெறுகிறது. அதன் படி, இந்தாண்டு நவராத்திரி விழா, 21ம் தேதி துவங்கியது. அன்றிலிருந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலையில் ஊஞ்சல் சேவையும் நடைபெறுகிறது. நான்காம் நாள் விழாவான நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில், ஏராளமான பக்தர்களும், உள்ளூர் வாசிகளும் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.