பதிவு செய்த நாள்
30
செப்
2017
02:09
பழநி: பழநி முருகன்கோயில் நவராத்திரி விழாவில இன்று(செப்.,30) சூரன்வதத்தை முன்னிட்டு, மதியம் 2:30மணிக்கு மேல் நடைசாத்தப்படுகிறது. பழநியில் நவராத்திரி விழா செப்.,21 முதல் 30 வரை நடக்கிறது. செப்.,21ல் பெரியநாயகியம்மன் கோயிலில், அதனைத்தொடர்ந்து திருஆவினன்குடிகோயிலும், மலைக்கோயில் சண்முகர், வள்ளி, தெய்வானை மற்றும் துவாரபாலகர்களுக்கு, போகர் ஜீவசமாதியில் காப்புக்கட்டப்பட்டு, புவனேஸ்வரி அம்மன் மலையில் இருந்து அடிவாரம் புலிப்பாணி ஆஸ்ரமத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
சூரன்வதம்: இன்று (செப்.,30ல்) விஜயதசமியை முன்னிட்டு அன்று அம்பு, வில் எய்தி சூரன்வதம் நடக்கிறது. இதற்காக மலைக்கோயிலில் மாலை 5:30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, முன்னதாக மதியம்1:30 மணிக்கு நடக்கிறது. பகல் 2:30 மணிக்குமேல் மலையிலிருந்து பராசக்திவேல் புறப்பட்ட உடன், மலைக்கோயில் சன்னதி சாத்தப்படும். பராசக்திவேல் பெரியநாயகியம்மன் கோயில் வந்தபின், மாலையில் தங்ககுதிரைவாகனத்தில் முத்துக்குமாரசுவாமி புறப்பட்டு கோதைமங்கலத்தில் புலிப்பாணிஆசிரமம் சார்பில் அம்புபோட்டு, சூரன்வதம் நடக்கிறது.
தங்கரதபுறப்பாடு : நவராத்திரிவிழாவை முன்னிட்டு பழநிமலைக்கோயில் தங்கரதப்புப்பாடு கடந்த 10 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இன்றுடன் விழா நிறைவுபெறுவதால் நாளை(அக.,1ல்) முதல் வழக்கம்போல் இரவு 7:00 மணிக்கு தங்கரதத்தில் சின்னக்குமாரசுவாமி உலா வருதல் நடக்கிறது.