பதிவு செய்த நாள்
06
அக்
2017
01:10
திருவள்ளூர் : தேசிகன் சாற்று மறை உற்சவத்தில் பங்கேற்பதற்காக, திருவள்ளூர், வீரராகவ பெருமாள், இன்று, ஸ்ரீபெரும்புதுார் புறப்பட்டுச் செல்கிறார். ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீவேதாந்த தேசிகன் அவதார மஹோற்சவம், 1ம் தேதி துவங்கி, 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் கடைசி நாளான, 7ம் தேதி, சாற்றுமறை நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சியில், திருவள்ளூர் வீரராகவ பெருமாள், ஸ்ரீபெரும்புதுார் எழுந்தருளி, ஆசிர்வதித்து அருள்வார். இந்த ஆண்டும், சாற்றுமறை நிகழ்ச்சியை முன்னிட்டு, இன்றிரவு, 10:00 மணிக்கு, வீரராகவர் கோவிலில் இருந்து, உற்சவர் புறப்பாடு நடக்கிறது. வழிநெடுகிலும், உபயங்கள் கண்டருளி, நாளை அதிகாலை, ஸ்ரீபெரும்புதுார் சென்றடைவார். அங்கு, பகல், 12:30 மணிக்கு, வீரராகவருக்கு திருமஞ்சனம் நடைபெறும். பின், அன்றிரவு, 9:00 மணிக்கு, திருவள்ளூருக்கு, உற்சவர் வீரராகவர் புறப்படுவார்.