பதிவு செய்த நாள்
06
அக்
2017
01:10
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் கோவிலில், நாளை இதய நிறைவு தியான மையம் சார்பில், இலவச தியான முகாம் நடைபெற உள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும், இதய நிறைவு தியான மையம், இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும், 70 ஆண்டுகளுக்கு மேலாக செயல்படுகிறது. பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் கம்பெனிகளுக்கு நேரடியாக சென்று, இலவச தியானப் பயிற்சியை அளிக்கிறது. இம்மையம் சார்பில், காஞ்சிபுரம், காந்தி சாலையில் உள்ள, முத்தீஸ்வரர் கோவிலில், நாளை காலை, 8:00 முதல், மாலை, 6:00 மணி வரை, தியானம் கற்றுக்கொள்ள இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விருப்பமுள்ளோர், 1800 103 7726 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதுகுறித்து, தியான மைய பயிற்சியாளர் கனகா சுப்ரமணியம் கூறியதாவது:தியான பயிற்சி மூலம், லட்சியத்தின் மீது கவனம் செலுத்த முடியும். விடாமுயற்சி வளரும்; மன அழுத்தம் குறையும்; ரத்த அழுத்தம் சீராகும். 15 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இப்பயிற்சியில் பங்கேற்கலாம். கட்டணம் எதுவுமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.