பெருந்துறை கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12அக் 2017 12:41
பெருந்துறை: ஈரோடு மாவட்டம், பெருந்துறை, புது பஸ் ஸ்டாண்ட் அருகில் அமைந்துள்ள, கோட்டை மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த, 4ல், பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. வரும், 18ல், பொங்கல் வைபவம் நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை, கம்பம் நடுவிழா நடந்தது. பெருந்துறை, குன்னத்தூர் ரோடு, செல்லாண்டியம்மன் கோவிலில் இருந்து, ராஜவீதி வழியாக, கம்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.