Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுந்தர விநாயகர் கோவிலில் வரும் 25ல் ... தல்லாகுளம் பெருமாள் கோயிலில் ராமாயண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராசிபுரம் மாரியம்மன் கோவிலில் ஐப்பசி திருத்தேர் விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2017
12:10

நாமக்கல்: ராசிபுரம் மாரியம்மன், செல்லாண்டியம்மன், ஆஞ்சநேயர் கோவிலில், ஐப்பசி திருத்தேர் விழா வரும், 24ல் துவங்குகிறது. ராசிபுரத்தில், பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன், செல்லாண்டியம்மன் மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் ஐப்பசி தேர்த்திருவிழா, வரும், 24ல் பூச்சாட்டுதலுடன் துவங்கி, நவ., 23 வரை நடக்கிறது. 24 இரவு, 7:00 மணிக்கு செல்லாண்டியம்மன், மாரியம்மனுக்கு பூச்சாட்டுதல் நடந்து, தினமும் பல்வேறு சமுகத்தினரின் மண்டப கட்டளை நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 26 இரவு, 8:00 மணிக்கு கம்பம் நடும் விழா, அன்றிரவு, 10:00 மணிக்கு குழந்தை வரம் வேண்டும் பக்தர்களுக்கு தயிர் சாதம் வழங்கப்படுகிறது. நவ.,6 காலை, 5:00 மணிக்கு பூவோடு எடுத்தலும், 7 இரவு, 8:00 மணிக்கு கொடியேற்று விழா நடக்கிறது. நவ., 9 அதிகாலை, 5:00 மணிக்கு அக்கினி குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு திருத்தேர் உற்சவ விழா நடக்கிறது. 10ல், வண்டி வேடிக்கை நடக்கிறது. 11ல், புஷ்ப பல்லக்கில் மாரியம்மன் பவனி வந்து சப்தாபரணம் நடைபெறுகிறது. 12ல் வசந்தோற்சவம் நடக்கிறது. நவ., 23 அன்று விடையாற்றி கட்டளையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ராஜகோபால், தக்கார் செல்வி, விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar