பதிவு செய்த நாள்
26
அக்
2017
01:10
கன்னிவாடி, கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், 1,008 படி பாலாபிேஷகத்துடன் குருபூஜை நடந்தது. வெளிமாநில சாதுக்களின் குவிந்ததால், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கன்னிவாடி அருகே கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில்,ஐப்பசி மாத மூல நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் குருபூஜை நடக்கிறது. இந்தாண்டு திருவிழா, அக். 24ல் துவங்கியது. இதற்காக, பல்வேறு பகுதிகளைச்சேர்ந்த பக்தர்கள், மாலையணிந்து விரதமிருந்தனர். சிவனுாரணி, திருமலைக்கேணி, திருமூர்த்தி, சுருளி, சதுரகிரி, சோமலிங்கபுரம், காசி, ராமேஸ்வரம், பம்பை உள்ளிட்ட இடங்களில் இருந்து, புனித நீர் எடுத்து வரப்பட்டது. தீர்த்த, பால் கலசங்களுடன் கிராம விளையாடல் நடத்தப்பட்டு, மூலவருக்கு தீர்த்தாபிேஷகம் நடந்தது. நேற்று, யாகம் நடத்தி, யாக தீர்த்தம், 108 படி பாலாபிேஷகத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு விசேஷ மலர் அலங்காரம், உற்சவருக்கு தங்ககிரீட அலங்காரத்துடன் குருபூஜை நடந்தது. அன்னதானக்கொடி ஏற்றி, சாதுக்களுக்கு வஸ்திர, சொர்ண தானம் நடந்தது. திரளான வடமாநில சாதுக்கள், தீர்த்தாபிேஷகம், குருபூஜையில் பங்கேற்றனர். பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். ஆன்மிக சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடந்தது.