பதிவு செய்த நாள்
02
நவ
2017
11:11
மடத்துக்குளம்: -மடத்துக்குளம் அருகே, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த கும்பாபிஷேகத்தில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.மடத்துக்குளம் அருகே வேடபட்டியில், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி, நேற்றுமுன்தினம் காலை, 8:00 மணிக்கு மங்களஇசை, விக்னேசுவர பூஜையுடன் தொடங்கியது. விழாவில் நேற்று காலை, 5:00 மணிக்கு சூரியபூஜை பரிவாரதெய்வங்களுக்கு மூலமந்திர அஷ்டோத்திரம், 6:30 மணிக்கு இரண்டாம்கால யாகவேள்வியும், அஸ்திரஹோமமும் நடந்தன.காலை, 9:50 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில் வேடபட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.