தஞ்சை பிரகதீஸ்வரருக்கு 1000 கிலோ அரிசி, 600 காய்கறி,இனிப்பால் அன்னாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03நவ 2017 05:11
தஞ்சை பெரியகோவிலில், 1000 கிலோ அரிசி, 600 கிலோ எடை அளவிலான காய்கறிகள் கொண்டு பிரகதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தது.
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலுக்கு தினம்தோறும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின் றனர். இக்கோவிலில் உள்ள பெருவுடையார், பெரிய நாயகி அம்மாள் ஆகிய தெய்வங்களுக்கு திருவிழா நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். குறிப்பாக பிரதோஷ நாட்க ளில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.
இந்த சிறப்பு வாய்ந்த பெரிய கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தில் பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். இந்த அபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதற்காக பிரகதீஸ்வரர் திருமேனிக்கு 1000 கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட அன்னம், 600 கிலோ எடைக் கொண்ட காய்கறி வகையால் அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் செய்யப் பட்டன. தொடர்ந்து சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு அன்னாபிஷேகம் செய்த அன்னத்தை பிரசஷதமாக வழங்கப் பட்டன.