பதிவு செய்த நாள்
03
நவ
2017
03:11
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், 4,225 கிலோ அரிசியில் தயாரிக்கப்பட்ட சாதத்தில், அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த, கங்கைகொண்டசோழபுரம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டு பழைமையான ராஜேந்திரசோழனால் கட்டப்பட்ட பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம், 60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் கொண்டது. இங்கு, ஆண்டுதோறும் ஐப்பசி பவுர்ணமி நாளில், அன்னாபிஷேகம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டுக்கான அன்னாபிஷேம், நடந்தது.
இதனை முன்னிட்டு கடந்த 1ம் தேதி காலை 9 மணிக்கு கணக்கு விநாயகருக்கு மகாபி ஷேகமும், 2ம் தேதி காலை 9 மணிக்கு பிரகதீஸ்வரர், அம்பாள், மகிஷாசுரமர்த்தினி, சுப்ரமணி யர் மற்றும் நவகிரகங்கள் ஆகியவற்றுக்கு மகாபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.
முக்கிய நிகழ்வாக 75 கிலோ அளவுள்ள 57 மூட்டை என 4,225 கிலோ பச்சரிசியால் சாதம் சமைத்து, காலை, 11 மணி முதல், மாலை, 4.15 மணி வரை, பிரகதீஸ்வரருக்கு அன்னாபி ஷேகமும், 6 மணியளவில் தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, இரவு, 9 மணிக்கு பக்தர்க ளுக்கு அன்னபிரசாதம் வழங்கப்படும். இதில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற் றனர். அன்னாபிரசாதத்துக்கு தயாரிக்கப்பட்டு லிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட சாதம், தீபாரா தனைக்கு பின், 70 சதவீதம் சாதம் பொதுமக்களுக்கும், 20 சதவீதம் சாதம் கால்நடைகளுக்கும், 10 சதவீதம் சாதம் மீன்களுக்கும் வழங்கப்பட்டது. விழாவில், அரியலூர் கலெக்டர் லட்சுமி பிரியா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்படுகளை காஞ்சி காமகோடி சங்கரமட அன்னாபிஷேக கமிட்டி மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந் தனர்.
இது குறித்து, அன்னாபிஷேக கமிட்டி ஒருங்கிணைப்பாளர் கோமகன் கூறியதாவது: அன்னாபிஷேகத்துக்காக, 4,225 கிலோ பச்சரிசியால் சாதம் தயார் செய்யப்பட்டு லிங்கத்துக்கு சாத்தப்பட்டது. லிங்கத்தின்மேல் சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுகிறது. இதனால், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதில், 108 சிவாச்சாரியர்கள் சேர்ந்து, சாதம் சமைத்து அன்னாபிஷேகம் செய்தனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.