கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
செஞ்சி: பெருவளூர் கோகிலாம்பாள் சமேத கோட்டீஸ்வரர் கோவிலில் ஐப்பசிமாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. செஞ்சியை அடுத்துள்ள பெருவளூர் கோகிலாம்பாள் சமேத கோட்டீஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கோட்டீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கோகிலாம்பாள், கோட்டீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். கோட்டீஸ்வரருக்கு அன்னாபிஷேகமும், கோகிலாம்பாளுக்கு காய்கனி அலங்காரமும் செய்தனர். தொடர்ந்து மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கினர்.