ஆத்தூர் விநாயகர் கோவில்களில் மகா சங்கடஹர சதுர்த்தி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08நவ 2017 11:11
ஆத்தூர்: ஆத்தூர், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், வெள்ளை விநாயகர் கோவிலில், மகா சங்கடஹர சதுர்த்தி விழா, நேற்று நடந்தது. வெள்ளை விநாயகருக்கு, சிறப்பு அபி?ஷகம் செய்தனர். பூக்கள், பழங்கள் கொண்டு சிறப்பு பூஜை செய்து, மகா தீபாராதனை நடந்தது. ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வழிபாடு செய்தனர். அதேபோல், ஆத்தூர், ராணிப்பேட்டை விநாயகர், கடை வீதி விநாயகர், விநாயகபுரம் சித்தி விநாயகர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், கைலாசநாதர், நரசிங்கபுரம் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.