கண்டாச்சிபுரம் : சிறுவாலை பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜைகள் நடந்தது. கெடார் அடுத்த சிறுவாலை கிராமத்தில் உள்ள பாலேஸ்வரர் கோவிலில், சோமவாரத்தை முன்னிட்டு உச்சிகால பூஜைகள் நடந்தது. காலை 11:00 மணிக்கு மூலவர் பாலேஸ்வரருக்கு, 1008 லலிதா சகஸ்ரநாம அர்ச்சனையும், சிறப்பு அபிஷேகங்களும் நடந்தன. தொடர்ந்து நடந்த உச்சிகால பூஜையில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் சம்பத், கோவில் அர்ச்சகர் கோபி அய்யர் ஆகியோர் செய்தனர்.