பக்தி செலுத்துவது என்றால், ஏதோ மிக பிரமாதமான செயல் போல் காட்டப்படுகிறது. நாமெல்லாம் அதற்கு தகுதியுடையவர்கள் தானா என்ற சந்தேகமும் சிலர் மனதில் எழுகிறது. ஆனால், ஆர்ய தர்மப்பிரகாசி என்ற நுõலில், பக்தி செலுத்த எளிய வழிகள் சொல்லப்பட்டுள்ளது. ஆத்மநிவேதனம் (தன்னையே கடவுளிடம் அர்ப்பணித்தல்) என்பது கடுமையான முறை. இதற்கு மனப்பக்குவம் வேண்டும். ஆனால், கடவுளின் புகழைக் கேட்டல் (ஆன்மிக சொற்பொழிவுகளுக்கு செல்லு தல்), பாடித்துதித்தல், கோயிலுக்குப் போய் வணங்குதல் போன்ற எளிய வழிகள் உள்ளன. உதாரணமாக, உங்களுக்கு பெருமாளை வணங்க விருப்பமென்றால், பெருமாள் கோயிலுக்குப் போய் மேற்கண்டவற்றில் ஒன்றைச் செய்யுங்கள். வீட்டிலும் பூஜை செய்யலாம். இதைவிட எளிய வழி, ஒரு செயலைத் துவங்கும் முன், அதாவது சாப்பிடும் முன், துõங்கும் முன், கடவுளை நினைத்தாலே போதும். நீங்களும் பக்தியாளர் என மார்தட்டிக் கொள்ளலாம்.