பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவிற்கு கம்பம் நடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூலை 2025 05:07
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் கம்பம் ஊன்றும் விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
பெரியகுளம் தென்கரை கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழாவை முன்னிட்டு ஜூன் 16ல் முகூர்த்தக்கால் ஊன்றப்பட்டது. நேற்று முன்தினம் இரவு கம்பம் நடுவிழாவையொட்டி வடகரை வரதப்பர் தெருவிலிருந்து பூஜாரிகள் வீட்டில் பூஜை செய்யப்பட்ட கம்பம் தூக்கி வரப்பட்டது. மேள, தாளங்கள் முழங்க மகாத்மாகாந்தி தெரு, ஆடுபாலம், பஜார்வீதி வழியாக கொண்டு வரப்பட்ட கம்பத்திற்கு பக்தர்கள் பூக்கள் தூவி வணங்கினர். பக்தர்கள் வெள்ளத்தில் மாரியம்மன் சன்னதிக்கு எதிர்புறம் கம்பம் நடப்பட்டது. ஜூலை 7ல் கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் திருவிழா நடைபெறும். முக்கிய திருவிழாவான ஜூலை 15ல் மாவிளக்கு, ஜூலை 16ல் அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் அம்மனை வழிபடுவர். ஜூலை 22ல் மறுபூஜை நடக்கும்.