சந்திர தரிசனம், திருவாதிரை விரதம்; சிவன், நடராஜரை தரிசிக்க சங்கடம் நீங்கும்..!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஜூன் 2025 10:06
சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் அதிபதி, ஜாதக கோளாறு, கிரக தோஷம், பெயர்ச்சி, நோய் தொற்று என நம் மனம், உடல், ஆயுளைப் பாதிக்கும் விஷயங்கள் நிறைய உள்ளன. இவற்றிலிருந்து நம்மைப் பாதுகாக்கும் சக்தியை மூன்றாம்பிறையன்று சந்திரன் அளிக்கிறார். மூன்றாம் பிறை தரிசனம் செய்தால் வருமானம், செல்வ செழிப்பு உண்டாகும். மூன்றாம் பிறை பார்க்க முடியாவிட்டால் வீட்டில் சிவ வழிபாடு செய்யலாம். சிவன் தலையில் இருக்கும் சந்திரனை இன்று தரிசனம் செய்வது சிறப்பு. மனதில் களங்கம் இல்லாத துாய பக்தி கொண்டவர்களை சிவன், தன் தலையில் வைத்துக் கொண்டாடுவார் என்பதை இதன் மூலம் உணர்த்துகிறார். ஆகவே மூன்றாம் பிறை பார்ப்பது நல்லது. சந்திர தரிசனம் செய்வதால் ஆரோக்கியம், ஆயுள் விருத்தி உண்டாகும்.
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் இருப்பவர் சிவன். திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். இன்று அனைத்து சிவாலயங்களிலும் நடராஜருக்கு திருமஞ்சனம் நடக்கும். முருகப்பெருமான் இந்த விரதம் இருந்து ஈசனின் அருள்பெற்றார். திருவாதிரை நடராஜருக்குரிய சிறப்பான விரதநாள் ஆகும். நட்சத்திரங்களில் ‘திரு என்ற அடைமொழியோடு வருவது ஆதிரை மற்றும் ஓணம் மட்டுமே. ஆடல்வல்லானின் ஆட்டத்தாலேயே அண்டசராசரங்களும் இயங்குகின்றன. வீட்டில் சிவபுராணம், தேவாரம், திருவாசகத்தை பக்தியுடன் படிக்க வேண்டும். மாதந்தோறும் திருவாதிரை விரதமிருந்து கயிலாயத்தில் வாழும் பேறு பெறுவோம்..!