பதிவு செய்த நாள்
10
நவ
2017
12:11
ராசிபுரம்: ராசிபுரம், வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில், வள்ளலார் சுவாமிக்கு, ஐப்பசி மாத பூச விழா இன்று நடக்கிறது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே, மருதூரில் பிறந்தவர் வள்ளலார். பசிப்பிணியை நீக்க சத்திய தரும சாலையை நிறுவியர். இவரது பெயரால், நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பசியாறுகின்றனர். வடலூரில் தலைமையிடம் இருந்தாலும், உலகமெங்கும், இவரது கொள்கையை பின்பற்றி நடப்பவர்கள் பசிப்பிணியை நீக்கி வருகின்றனர். எல்லா உயிர்களும் இன்புற்று இருக்க நினைத்தவருக்கு, ஐப்பசி மாத பூச விழா, ராசிபுரத்தில் உள்ள, வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் இன்று காலை, 11:30 மணியில் இருந்து, 2:30 மணி வரை நடக்கிறது. அதில், வள்ளலார் குறித்த சொற்பொழிவை, ராசிபுரம், மனவளக்கலை மன்றத்தை சேர்ந்த பேராசிரியர் சவுந்தரராஜன் நிகழ்த்துகிறார். மதியம், 1:30 மணிக்கு ஜோதி தரிசனம். பின்னர், அன்னதானம் வழங்கப்படுகிறது.