வருஷநாடு: வருஷநாடு அருகேதர்ம ராஜபுரம் -தங்கம்மாள்புரத்திற்கு இடையே இயற்கை எழில் கொஞ்சும் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. நாகம்மன் கோயில். மூல வைகை ஆற்றுப்படுகையில் உள்ள இக் கோயிலுக்கு பெரும்பாலும் பெண் பக்தர்கள் அதிகம் வருவர். பல்வேறு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை வெள்ளிக்கிழமையில் தரிசனம் செய்வர். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், குடும்ப கஷ்டத்தில் உள்ளவர்கள் இங்கு வந்து தங்களது சுமைகளை வெள்ளை காகிதத்தில் எழுதி நாகம்மன் கழுத்தில் மாலையாக அணிவித்தால், குழந்தை பாக்கியம் கிட்டும், அவர்கள் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த கோயிலுக்கு அருகில் செல்லும் மூல வைகை ஆற்று தண்ணீரை புனித நீராககருதுகின்றனர். ஆடிப்பெருக்கு மற்றும் தைப் பொங்கல் நாட்களில் அன்னதானம் வழங்கப்படும். மேல்விபரங்களுக்கு பூஜாரி முருகனை 8973164120 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.