பதிவு செய்த நாள்
18
நவ
2017
01:11
பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், கார்த்திகை மாதம் முதல் நாளான நேற்று, ஐயப்பன், மஞ்சள் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார வழிபாடு நடந்தது. சபரிமலை செல்வதற்கு விரதமிருக்கும் பக்தர்கள், அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் வளாகத்தை சுற்றி வந்து, குருசாமிகளிடம் மாலை அணிந்தனர். வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஐயப்ப சுவாமி கோவிலில், கார்த்திகை முதல் நாளான நேற்று காலை, 5:00 மணிக்கு சிறப்பு யாக பூஜையும், அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜையும் நடந்தது. கிணத்துக்கடவு சிவலோகநாதர், பொன்மலை வேலாயுதசுவாமி கோவில்களில், ஐயப்பபக்தர்கள் அதிகாலையில் மாலை அணிந்தனர்.-- நிருபர் குழு -