பதிவு செய்த நாள்
20
நவ
2017
12:11
ராசிபுரம்: கல்லாங்குளம், அண்ணாமலையார் கோவிலில் நடக்கும் தீப திருவிழாவில், 3,937 அடி உயரம் கொண்ட போதமலையில், கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. ராசிபுரம் அருகே, கல்லாங்குளத்தில், அண்ணாமலையார் கோவில் உள்ளது. இங்கு வரும், 23ல், கார்த்திகை தீப திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்றிலிருந்து, தொடர்ந்து, ஒன்பது நாட்கள் உற்சவ விழா நடக்கிறது. டிச.,2 அதிகாலை, 5:00 மணிக்கு, பரணி தீபம் ஏற்றுதல் நடக்கிறது. தொடர்ந்து, 3,937 உயரம் உள்ள போதமலை மலை உச்சிக்கு தீபக்கொப்பரை, திரிகாடா துணி, நெய் ஆகியவை அனுப்பி வைக்கப்படுகிறது. அன்று, மாலை, 5:00 மணிக்கு போதமலை மலை உச்சியில், மஹா கார்த்திகை தீபம் ஏற்படுகிறது.