பதிவு செய்த நாள்
20
நவ
2017
01:11
கிருஷ்ணராயபுரம்: மகாதானபுரம் சிருங்கேரி சாரதா பீடம் சார்பில், கமலானந்த நரசிம்ம பாரதி சுவாமிகளின், 89வது ஆராதனை விழா மற்றும் ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை விழா, மகாதான புரத்தில் நடந்தது. கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மகாதான புரத்தில், சிருங்கேரி சாரதா பீடம் செயல்படுகிறது. இதில், பாரதி தீர்த்த சுவாமிகள் மற்றும் விதுசேகர பாரதி சுவாமிகள் மூலம், கமலானந்த நரசிம்ம பாரதி சுவாமிகளின், 89வது மற்றும் ராமானந்த சரஸ்வதி சுவாமிகளின், 81வது ஆராதனை விழா, நேற்று காலை, 7:00 மணியளவில், கோ பூஜையுடன் துவங்கியது. சாரதா பீட சன்னிதானத்தில், ருத்ர அபிஷேகம், அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜையை தொடர்ந்து, இசை, பஜனை, நாமசங்கீர்த்தனம், பக்திப் பாடல் நிகழ்ச்சிகள், கோவில் வளாகத்தில் நடந்தன.