பதிவு செய்த நாள்
02
டிச
2017
11:12
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், கங்கையம்மன் கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா, நேற்று, கோலாகலமாக நடந்தது.செங்கல்பட்டு சின்ன நத்தம் முருகேசனார் தெருவில், கங்கையம்மன் கோவில் உள்ளது. இங்கு, 15 ஆண்டுகளுக்கு முன், கும்பாபிஷேக விழா நடந்தது.இதையடுத்து, திருப்பணி குழுவினர் சார்பாக, கோவிலில் பணிகள் நடந்து முடிந்தன.கடந்த, 29ம் தேதி, கணபதி ஹோமம், பவகிரஹ ஹோமம், மஹாட்சிமி ஹோமம், கோ பூஜையுடன் விழா, துவங்கியது. நான்கு யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 10:00 மணிக்கு, மேள தாளங்கள் முழங்க, அதிர்வேட்டு ஒலிக்க, கலசங்கள் புறப்பாட்டுக்கு பின், கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. திருவடிசூலம் ஆதிமகாசக்தி தேவி, ஸ்ரீ கருமாரியம்மன் ஆரணிய சேஷத்திரம் அருளாளர் புண்ணியக்கோட்டி மதுரை முத்து சுவாமிகள் முன்னிலையில், கங்கையம்மனுக்கு கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசூதனன், பொதுமக்கள் பங்கேற்றனர்.