பதிவு செய்த நாள்
02
டிச
2017
11:12
வண்ணாரப்பேட்டை:வண்ணாரப்பேட்டை, சேனியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நேற்று நடந்தது. சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை, சிங்காரதோட்டம், 7வது தெருவில் சின்ன சேனியம்மன் கோவில் அமைந்துள்ளது.தற்போது, இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, கற்கோவிலாக சிற்ப வேலைபாடுகளுடன் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா, கோலாகமாக நேற்று நடந்தது. இக்கோவில் கும்பாபிஷேக விழாவில், அமைச்சர், ஜெயகுமார் பங்கேற்றார்.நேற்று காலை, 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, பிம்பசுத்தி, மூர்த்திரக் ஷாபந்தனம் நடந்தன.காலை, 6:45 மணிக்கு, நான்காம் காலயாக சால பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்ஸாஹுதி, திரவ்யாஹுதி நடந்தன.மேலும், காலை, 9:00 மணிக்கு, யாத்ராதானம், கடம் புறப்பாடும், காலை 9:30 மணிக்கு, சின்ன சேனியம்மன் விமான கோபுரங்கள் மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. மதியம், 12:00 மணிக்கு, மகா அபிஷேகம் மற்றும் தீபாரானையும்; மாலை, 6:00 மணிக்கு, அம்மன் திருவீதி உலாவும் நடந்தன.கும்பாபிஷேக விழாவையொட்டி, காலை, 10:30 மணி முதல் மாலை, 4:00 மணி வரை சிங்காரத்தோட்டம், 3வது தெரு முழுவதும் மாபெரும் சமபந்தி விருந்து நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, அம்மன் அருளை பெற்றனர்.