திருவிளக்கு வழிபாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. சங்க கால இலக்கியங்கள் இவ்வழிபாட்டை கார்த்திகை விளக்கீடு என்கின்றன. பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை போன்ற எட்டுத்தொகை நூல்களில் இடம் பெற்றுள்ளன. சங்க இலக்கிய ஆய்வாளர்கள், கார்த்திகை மாதத்தை முதல் மாதமாக கொண்டு தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர்.