கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க, விளக்கேற்றுவது குறித்து, சம்பந்தர் பாடியிருக்கிறார். மயிலாப்பூரில் தனக்கு நிச்சயம் செய்த பூம்பாவை என்ற பெண் திடீரென மரணமடையவே, ஞானசம்பந்தர், “விளக்கீடு காணாதே போதியே பூம்பாவாய்” என்று பாடினார். கார்த்திகை தீபவிழா மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பாக நடந்துள்ளது பற்றி அவர் சொல்லியுள்ளார். இதிலிருந்து இந்த விழாவின் மேன்மையை அறியலாம்.