திருக்கார்த்திகை தினத்தன்று, வீட்டில் கிளியஞ்சட்டியில் (களிமண் விளக்கு) பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு, பஞ்சுத்திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.வீட்டு வாசலில் லட்சுமி அம்சமான குத்துவிளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். விளக்கிற்கு பசு நெய் பயன்படுத்த காரணம் இருக்கிறது. தேவர்களின் வசிப்பிடமாக இருப்பது பசு. பசு நெய்யில் அம்பிகை வாசம் செய்கிறாள். தீபத்தில் பசு நெய் இட்டதும், அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.