Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று மிலாடி நபி டிச.,14 க்கு பிறகு சதுரகிரி மலையில் பக்தர்களுக்கு அனுமதி டிச.,14 க்கு பிறகு சதுரகிரி மலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரோகரா கோஷம் விண்ணதிர திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 டிச
2017
06:12

திருவண்ணாமலை: லட்சக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்ட திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

Default Image
Next News

திருவண்ணாமலையில் அருணாசலேசுவரர் கோவிலில், தீபத்திருவிழா கடந்த, 23ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் முக்கிய நிகழ்வான பரணி தீபம்,  ஏற்றும் நிகழ்ச்சி இன்று (டிச.2ல்)  அதிகாலை 3.20 மணிக்கு வெகு விமர்சையாக நடந்தது.   திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படும்  கார்த்திகை தீப திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான மஹாதீபம் (டிச.2ல்) மாலை 6:00 மணிக்கு ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு அதிகாலை 2.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு விநாயகர், சமேத வள்ளி தெய்வானை முருகர், சமேத உண்ணாமுலையம்மன் அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், மற்றும் சண்டி கேஸ்வரர், ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து ஏகன் அனேகன் என்பதை விளக்கும் வகையில் ஸ்வாமி மூல கருவறையில் கற்பூர தீபம் ஏற்றி, முத்து குருக்கள் தலைமையில், சிவாச்சாரியர்கள் வேதபாராயணம் ஓத, வேத மந்திரங்கள் முழங்க அந்த கற்பூர தீபத்திலிருந்து ஒரு மடக்கில் நெய்திரியிட்ட விளக்கு ஏற்றப்பட்டு பின்னர் பஞ்ச பூதங்களை  குறிக்கும் வகையில் சுவாமி மூல கருவறையில் எதிரில் ஐந்து மடக்குகளில் அதிகாலை 3:20 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.   பின்னர் விநாயகர் சந்நதி  உள்ளிட்ட அனைத்து சந்நதிகளிலும், தீபங்கள் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து, மாலை 6 மணிக்கு அனேகன் ஏகன் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் மஹாதீபம் ஏற்றப்பட்டது. இதனை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வாணை சமேத முருகர், அண்ணாமலையார் சமேத உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தங்க கொடிமரத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த பின் தீப தரிசன மண்டபத்தில் ஒன்றாக அமர்ந்தனர். அப்போது அர்த்தநாரிஸ்வரர் தங்க கொடி மரம் முன்பு  எழுந்தருளி நடனமாடி காட்சியளித்தார். காலையில் சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட ஐந்து அகல் விளக்குகளையும் உடன் கொண்டு வந்து கொடிமரத்தின்  முன்பாக உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்த்தனர். பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில் 5 தீப்பந்தகள் ஏற்றப்பட்டு அவைகளை கொண்டு 2ஆயிரத்து 668  அடி மலை உயரத்தில் உள்ளவர்களுக்கு தெரியும் படி காண்பிக்கப்பட்டது. அப்போது மஹா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதைக் கண்ட லட்சக்கணக்கான  பக்தர்கள் எழுப்பிய அரோகரா கோஷம் விண்ணை முட்டும் வண்ணம் இருந்தது. கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, கோயில் வளாகம் முழுவதும் வண்ண  விளக்குகளாலும், கோயில் முதல் பிரகாரம் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் ... மேலும்
 
temple news
அயோத்தி; விவாக பஞ்சமி என்பது இந்துக்களால் ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை கொண்டாடும் ஒரு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு மாயூரநாதர் வதான்யேஸ்வரர் ஆலயங்களில் ... மேலும்
 
temple news
மூணாறு; சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால் சத்திரம், புல்மேடு வழியாக சபரிமலைக்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயிலில் கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar