பதிவு செய்த நாள்
04
டிச
2017
12:12
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு சிவலோகநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், சிவலோகநாதருக்கும், நந்திக்கும் ஒரே நேரத்தில் பால், பன்னீர், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், குங்குமம், அரிசிமாவு, திருநீறால் அபிேஷக பூஜை நடந்தது. சிவலோகநாதர், சிவலோகநாயகி, நந்திக்கும் மலர் அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பின், உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோவிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், காசிவிஸ்வநாதருக்கும், பெரிய களந்தை ஆதிஸ்வரன், தேவணாம்பாளையம் அமணலிங்கேஸ்வரர், அரசம்பாளையம் திருநீலகண்டர், கிணத்துக்கடவு எஸ்.என்.எம்.பி., நகர் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.