காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த ளையனார்வேலுார் பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் லட்சதீப விழா நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த ளையனார்வேலுாரில் பிரசித்தி பெற்ற பாலசுப்ர மணிய சுவாமி கோவில் உள்ளது.க்கோவிலில் ஒன்பதாம் ஆண்டு லட்சதீப பெருவிழா நடந்தது. விழாவையொட்டி பகல் 12:00 மணிக்கு மூலவர் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும் சந்தன காப்பு அலங்காரமும் நடந்தது. மாலை 5:00 மணிக்கு லட்சதீப உற்சவர் ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தீபமேற்றி வழிபட்டனர்.