ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் வரும் 11ல் லட்ச தீப திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06டிச 2017 02:12
திருமழிசை : திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோவிலில் வரும் 11ம் தேதி 19ம் ஆண்டு லட்ச தீப திருவிழா நடைபெற உள்ளது. வெள்ளவேடு அடுத்த திருமழிசையில் அமைந்துளளது குளிர்ந்தநாயகி சமேத ஒத்தாண்டேஸ்வரர் கோவில். ங்கு கார்த்திகை மாத நான்காவது சோமவார திருவிழாவை முன்னிட்டு. லட்ச தீப திருவிழா நடைபெறுவது வழக்கம். ந்த ஆண்டு லட்ச தீப திருவிழா 11ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக 10ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் திருவிழா துவங்குகிறது. பின் மாலை 6:00 மணிக்கு 108 சங்கு ஸ்தானமும் முதல் கால யாகசாலை பூஜையும் நடைபெறும். மறுநாள் 11ம் தேதி காலை 7:00 மணிக்கு ரண்டாம் கால யாகசாலை பூஜையும் காலை 7:15 மணிக்கு மகா அபிஷேகமும் காலை 9:00 மணிக்கு 108 சங்காபிஷேகமும் நடைபெறும். பின் மாலை 6:00 மணிக்கு லட்ச தீபம் ஏற்றுதலும் அதை தொடர்ந்து ரவு 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதிஉலாவும் நடைபெறும்.