பதிவு செய்த நாள்
09
டிச
2017
12:12
ஆத்தூர்: உலக நன்மை வேண்டி, 108 திருவிளக்கு சிறப்பு பூஜை நடந்தது. கார்த்திகை மாத வெள்ளியொட்டி, ஆத்தூர், கோட்டை, காயநிர்மலேஸ்வரர், ஐயப்பன் கோவிலில், நேற்று காலை, சுவாமிக்கு நெய் அபி?ஷகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. ஐயப்ப பக்தர்கள் சார்பில், 108 அகல்விளக்கு தீபம் ஏற்றி, பெண்கள் வழிபட்டனர். தொடர்ந்து, உலக நன்மை வேண்டி, சிறப்பு பூஜை நடந்தது. அப்போது, மூலவர் ஐயப்பன், வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.