பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில், அன்னை சாரதா தேவி ஜெயந்தி விழா நடந்தது.வித்யாலய வளாகத்தில் உள்ள புத்தர் மைதானத்தில் அதிகாலை நடந்த பிரார்த்தனை கூட்டத்தில், 2 ஆயிரம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் பேசுகையில், சாரதா தேவியார் மக்களுக்கு தொண்டு செய்து வாழும் வாழ்க்கையை கற்றுத் தந்தவர். ராமகிருஷ்ணரின் உபதேசங்களை வாழ்க்கையாக கொண்டு வாழ்ந்து, அறச்சீடர்களை உருவாக்கியவர், என்றார்.விழாவையொட்டி வித்யாலய கோவிலில் சிறப்பு யாகம், வித்யாலய கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவியரின் பஜனை நிகழ்ச்சி நடந்தது.