திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில், நேற்று மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை விழா நடந்தது. திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள மெய்ப்பொருள்நாயனார் சித்தி வளாகத்தில்‚ குருபூஜை விழா நடந்தது. காலை 9:30 மணிக்கு‚ மெய்ப்பொருள் நாயனாருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்‚ செத்தவரை சிவஜோதி மோனசித்தர் இடபக் கொடியை ஏற்றிவைத்து, சிவவேள்வியை துவக்கி வைத்தார். மாவட்ட வீரசைவ சிவஞானியர், திருக்கூட்டத்தினர் தீப வழிபாடு, ஐந்தெழுத்து வேள்வி நடத்தினர். தொடர்ந்து இட்டலிங்க ஆத்மலிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகம்‚ ஆராதனை‚ மலர்வழிபாடு‚ ஒளிவழிபாடு நடத்தினர். விழாவில், ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.