திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தபோவனத்தில் ஞானானந்தகிரி சுவாமிகளின் 44 வது ஆண்டு ஆராதனை விழா, வரும் 20ம் தேதி துவங்குகிறது. திருக்கோவிலுார் தபோவனத்தில், சுவாமி ஞானானந்தகிரி சுவாமிகளின், 44 வது ஆராதனை விழா, வரும் 20ம் தேதி துவங்குகிறது. அதிகாலை 5:00 மணிக்கு மூர்த்திகள் வழிபாடு‚ கணபதி ேஹாமம்‚ பாத பூஜைகளுடன் விழா துவங்குகிறது. இரவு 7:30 மணிக்கு தேசூர் ஸ்ரீ டி.எஸ்.ஆர். செல்வரத்தினம் குழுவினரின் நாதஸ்வர இசைநிகழ்ச்சி நடக்கிறது. மறுநாள் அதிகாலை 5:30 மணிக்கு‚ கிருஷ்ண யஜூர்வேத பாராயணம்‚ மஹாருத்ர ஜபம்‚ மகா சங்கல்பம்‚ அதிஷ்டானத்தில் லட்சார்ச்சனை நடக்கிறது. தொடர்ந்து 22ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு‚ மகா கணபதி ேஹாமம்‚ மாலை 6:00 மணிக்கு‚ பகவதி சேவை நடக்கிறது.
வரும் 27ம் தேதி முதல் அடுத்த மாதம் 2ம் தேதி வரை தினசரி மாலை 3:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை, பரனுார் கிருஷ்ணப்ரேமி சுவாமிகளின் உபன்யாசம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 31ம் தேதி காலை 6:00 மணிக்கு‚ மகாருத்ர ேஹாமம்‚ 8:30 மணிக்கு‚ நவசண்டி ேஹாமம் நடக்கிறது. ஆராதனை தினமான ஜனவரி 3ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு‚ விசேஷ பாதபூஜை‚ லட்சார்ச்சனை பூர்த்தி‚ விசேஷ அதிஷ்டான பூஜைகள்‚ 10:15 மணிக்கு துவங்கி மதியம் 1:30 மணிவரை தீர்த்தநாராயண பூஜைகள் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீஞானானந்த நிகேதன் நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.