பதிவு செய்த நாள்
14
டிச
2017
01:12
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, ஐயப்பன் கோவிலில், 18ம் படி திறப்பு வரும், 16ல் நடக்கவுள்ளது. இதில், ஆண், பெண் இருபாலரும் படியேறி ஐயப்பனை தரிசிக்கலாம். புன்செய்புளியம்பட்டி, நேரு நகரில் சித்தி விநாயகர், தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஐயப்பனுக்கு சபரிமலையில் உள்ளது போன்று, 18 படிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் மார்கழி மாதம் முதல் சனிக்கிழமையில், 18ம் படி திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதன்படி, இந்தாண்டு வரும், 16 காலை, 6:00 மணிக்கு, தத்துவங்களை விளக்கும், 18ம் படி, குருசாமி முன்னிலையில் திறக்கப்படுகிறது. தொடர்ந்து, 108 சங்காபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. அன்று மாலை, 6:00 மணி வரை ஆண், பெண் இருபாலரும், 18ம் படியேற அனுமதிக்கப்படுவர். இரவு, 7:00 மணிக்கு, 18ம் படிக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, படி பூஜை நடக்கிறது. அதன்பின் நடை அடைக்கப்படும். இதையொட்டி, நாளை தர்மசாஸ்தா ஐயப்பன் உற்சவர் ஊர்வலம், டானாபுதூர் கரிவரதராஜபெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு, முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை அடைகிறது.