சிதம்பரம் : அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவர், சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று நடனமாடினார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சுவாதி,60, அமெரிக்காவில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கும் இவர், இளம் வயதில் சென்னையில் பரதக் கலையை கற்று தேர்ந்துள்ளார். சென்னையில் நாட்டிய பள்ளி பொறுப்பாளர் லட்சுமி விஸ்வநாதன் மற்றும் சீனாவைச் சேர்ந்த தனது நண்பர்கள் 11 பேருடன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தார். நடராஜர் கோவிலை சுற்றிப் பார்த்து சிறப்பு பூஜை நடத்தினர். நாட்டிய மாடி நடராஜருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆயத்தமாக உடையணிந்து வந்திருந்தனர். நடராஜர் சன்னதி எதிரில் சிறிது நேரம் நடன மாடி அசத்தியதால் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.