கோபியில் சாரதா மாரியம்மன் கோவிலில் மார்கழி பூஜை சனிக்கிழமை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2017 02:12
கோபி: கோபி சாரதா மாரியம்மன் கோவிலில், மார்கழி மாத பூஜை, சனிக்கிழமை முதல் கோலாகலமாக நடக்கிறது. கோபி, கடைவீதியில் சாரதா மாரியம்மன் கோவில் உள்ளது. கார்த்திகை கடைசி வெள்ளி என்பதால், அம்மனுக்கு நேற்று அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சனிக்கிழமை மார்கழி மாதம் பிறக்கிறது. இதனால் சனிக்கிழமை அதிகாலை முதல், மாதம் முடியும் வரை, சிறப்பு கோவிலில் பூஜை நடக்கிறது. நாள்தோறும் காலை, 5:00 மணிக்கு அபிஷேகம், 5:50 மணிக்கு பூஜை, 6:00 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.