பதிவு செய்த நாள்
18
டிச
2017
05:12
ஆனைமலை;ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நேற்று அமாவாசையை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்துச் சென்றனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று அமாவாசை என்பதால், நேற்று முன்தினம் இரவு முதலே, பல ஊர்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனை தரிசித்தனர். அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள், சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடத்தது. மேலும், ஆற்றுப்பகுதியில் பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். கோவிலுக்கு கூட்டம் அதிகமாக வரும் என்பதால், பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்கவும், அம்மனை தரிசிக்க வரிசையில் நிற்பவர்களை ஒழுங்குபடுத்தவும், நேற்று முன்தினம் முதல், ஆனைமலை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.மேலும், பக்தர்கள் ஆனைமலைக்கு வந்து செல்ல வசதியாக கோவை, உடுமலை, பொள்ளாச்சி உட்பட, பல பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.