பதிவு செய்த நாள்
18
டிச
2017
05:12
சென்னை : சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, ’சென்னையில் திருநள்ளாறு’ எனும் நிகழ்ச்சியில், சிறப்பு ஹோமம் நடத்தப்படுகிறது. நவக்கிரஹங்களில் பிரதானமானவர், சனி பகவான். அவர், இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை, ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்வது, சனிப் பெயர்ச்சி. இந்த ஆண்டு டிச., 19ம் தேதி, சனீஸ்வர பகவான், விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பிரவேசிக்கிறார். சனிப் பெயர்ச்சி, ஒவ்வொரு ராசிக்கும் ஒரு பலன் கொடுக்கும். பரிகாரம் செய்ய வேண்டிய, ரிஷபம், மிதுனம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம் ஆகிய ராசிக்காரர்கள் வசதிக்காக, ’சென்னையில் திருநள்ளாறு’ எனும் நிகழ்ச்சியை, ’அமா வேதிக் சர்வீசஸ்’ சார்பில் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு ஹோமம், சென்னை, சாலிகிராமம், வேலாயுதம் காலனி, முதல் மெயின் ரோடு, எண். 70, முதல் மாடியில், டிச., 19ம் தேதி காலை, 6:00 மணி முதல் மதியம், 1:30 மணி வரை நடக்கிறது. இதற்காக, திருநள்ளாறில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில், கோ பூஜை, கணபதி ஹோமம், சாந்தி, ஆயுஷ் ஹோமம், சங்கல்பம், நவக்கிரஹ சனீஸ்வர ஜபம், 28 நட்சத்திர ஹோமம் உள்ளிட்டவை நடக்கின்றன. சங்கல்பத்திற்கு, 300 ரூபாய், 800 ரூபாய் என, இரு பிரிவாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.