பதிவு செய்த நாள்
16
டிச
2011
03:12
வீட்டில் ஆண்டாளை வைத்து வழிபட்டால், குழந்தைகள் நல்லதைப் பேசுவார்கள் என்பது காலம் காலமான நம்பிக்கை. இதற்கு காரணம் உண்டு. தெய்வங்கள் பூமியில் சிலை வடிவில் இருப்பதை அர்ச்சாவதாரம் என்பர். சிலையை ஒரு படி தண்ணீர் என கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த சிலையில் தெய்வத்தை எழுந்தருளச் செய்தால் அது ஆயிரம் படி பால் கலந்ததற்கு ஒப்பாகும். அதிலும், கோதையை எழுந்தருளச் செய்தால், நம் வீட்டுப் பிள்ளைகள் நல்லதையே பேசுவார்கள். நல்லதைப் பேசுபவன் நல்லதையே சிந்திப்பான். அவள் அழகாய் பேசுவாள் என்பதற்கு உதாரணம் இருக்கிறதா என்றால், அவளது திருப்பாவை, நாச்சியார் திருமொழி ஆகியவையே அதற்கு உதாரணம். மார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால் என்று துவங்கி, வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை என்று முடிக்கும் வரை இனிமையான சொற்களால் அவள் பாடுவாள். எங்காவது கடுமையான வார்த்தை வருகிறதா என்றால் இல்லவே இல்லை.வாரணமாயிரம் சூழ வலம் வந்து நாரணன் நம்பி என்று பாடும் பாடல், இன்று எல்லா வீடுகளிலும், எல்லார் வாயிலும் ஒலிக்கிறதென்றால், அதன் மென்மையே காரணம்.