ஆண்டிபட்டி, சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்பசுவாமி கோயிலில் மார்கழி விழாவிற்கான கொடியேற்று விழா நடந்தது. இக்கோயில் வளாகத்தில் உள்ள 49 அடி உயர மாகாளி அம்மனுக்கு டிச. 27 ல் பூச்சொரிதல் விழா, பாலாபிேஷக விழா மற்றும் ஐயப்பசுவாமிக்கு படிபூஜை விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனை முன்னிட்டு நடந்த விழாவில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. கோயில் நிர்வாக தலைவர் முத்துவன்னியன், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.