பதிவு செய்த நாள்
21
டிச
2017
01:12
பவானி: பவானி, கருக்குபாளையம் மாதேஸ்வர சுவாமி கோவிலில், கும்பாபி?ஷக முதலாம் ஆண்டு நிறைவு விழாவை தொடர்ந்து, 108 சங்காபிஷேகம் நடந்தது. பவானி, ஜம்பை கிராமத்திலுள்ள கருக்குபாளையம் சிறிய குன்றின் மீது, காத்யாயனி உடனமர் மாதேஸ்வர சுவாமி கோவில், புதியதாக கட்டப்பட்டு சென்ற ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று மாலை, 4:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் விழா துவங்கி, புண்யாஹவாசனம், எஜமான சங்கல்பம், 108 சங்கு ஆவாஹன பூஜை, காத்யாயனி உடனமர் மாதேஸ்வர சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, 108 சங்காபிஷேகம், மஹா தீபாராதனை நடந்தது.