கும்பகோணம் அருகிலுள்ள உப்பிலியப்பன் கோயிலில் பெருமாளுக்கு உப்பில்லாத பண்டம் நைவேத்யம் செய்யப்படுகிறது. லட்சுமி பூலோகத்தில் மானிட ஜென்மம் எடுத்திருந்தாள். அவளுக்கு வயது குறைவாக இருந்த நேரத்தில், பெருமாள் அவளை மணக்க ஆசைப்பட்டார். அவளது தந்தை, “இந்தப் பெண்ணுக்கு சரியாக உப்பு போட்டுக்கூட சமைக்கத் தெரியாது. அதற்குள் எப்படி திருமணம் செய்து கொடுப்பது? என்றார். உப்பில்லாத பண்டமாக இருந்தாலும் பரவாயில்லை. நான் சாப்பிட்டுக் கொள்கிறேன் என பெருமாள் சொல்லி விட்டார். பின் திருமணம் நடந்தது. அன்று முதல் சுவாமிக்கு உப்பில்லாத பண்டம் படைக்கப்படுகிறது. பிரசாத ஸ்டாலிலும் உப்பில்லாத பண்டம் விற்பனை ஆகிறது. உப்பு சேர்த்த உணவை கோயிலுக்குள் கொண்டு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.